வீராங்கனையை முத்தமிட்ட விவகாரத்தில் லுயிஸ் ருபையாலெஸ் மீது நடவடிக்கை

ஆஸ்திரேலியா: 90 நாட்கள் சஸ்பெண்ட்... ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி பரிசளிப்பு விழாவின் போது வீராங்கனை ஒருவரை முத்தமிட்ட விவகாரத்தில் ஸ்பெயின் கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் லுயிஸ் ருபையாலெஸ் , பிபா ஒழுங்கு நடவடிக்கை குழுவால் 90 நாட்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

உலக கோப்பை கால்பந்து போட்டி இறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் வீராங்கனைகளுக்கு பதக்கம் வழங்கப்பட்டது.

அப்போது மேடையில் நின்று இருந்த ஸ்பெயின் கால்பந்து கூட்டமைப்பு தலைவர் லுயிஸ் , வீராங்கனை ஜெனி ஹெர்மோசோவை வாழ்த்தும் போது முத்தமிட்டார்.

இதற்கு உலகம் முழுவதும் மகளிர் அமைப்பினர் உள்ளிட்டோரிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து உலக கால்பந்து கூட்டமைப்பு ஒழுங்கு நடவடிக்கை குழு லுயிஸ் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.