தடுமாறி விழுந்ததால் தங்கப் பதக்கத்தை இழந்த வீராங்கனைகள்

ஹங்கேரி: தங்கத்தை பறிக்கொடுத்த வீராங்கனைகள்... ஹங்கேரி நாட்டில் நடைபெற்று வரும் உலக தடகள போட்டியில் இரண்டு ஓட்டபந்தயங்களில் வீராங்கனைகள் இருவர் தடுமாறி கீழே விழுந்ததால் தங்கப் பதக்கத்தை பறிகொடுத்தனர்.

மகளிருக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் நெதர்லாந்தின் சிபான் ஹாசன் இலக்கு நிறைவடையும் 20 மீட்டருக்கு முன்பாக தடுமாறி கீழே விழுந்ததால் எத்தியோப்பியாவின் குடாஃப் செகே தங்கப் பதக்கம் வென்றார்.

இதே போன்று 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் நெதர்லாந்து வீராங்கனை ஃபெம்கே போல் ஐந்து மீட்டர் தூரத்தில் கீழே விழுந்ததால் அமெரிக்க வீராங்கனை வெற்றி இலக்கை எட்டி தங்கம் வென்றார் .