பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்புக்கு171 ரன்கள் எடுத்தது

பெங்களூரு அணி திணறல்... பஞ்சாப் அணிக்கு எதிராக ஐ.பி.எல்., லீக் போட்டியில் பெங்களூரு அணி திணறலான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. சிறிய மைதானமான சார்ஜாவில் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 171 ரன்கள் மட்டும் எடுத்தது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் 13வது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. சார்ஜாவில் நடக்கும் லீக் போட்டியில் பெங்களூரு, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.'டாஸ்' வென்ற பெங்களூரு அணி கேப்டன் கோஹ்லி, பேட்டிங் தேர்வு செய்தார்.

இந்த அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. பஞ்சாப் அணியில் மன்தீப், பிரப்சிம்ரன், முஜீப் அர் ரஹ்மான் நீக்கப்பட்டு, கெய்ல், முருகன் அஷ்வின், தீபக் ஹூடா சேர்க்கப்பட்டனர். பெங்களூரு அணிக்கு பின்ச் (20), தேவ்தத் படிக்கல் (18) ஜோடி வேகமான துவக்கம் கொடுத்தது.

வாஷிங்டன் சுந்தர் 14 பந்தில் 13 ரன்கள் மட்டும் எடுத்து வெளியேறினார். ஷிவம் துபே (23), ஜோர்டன் வேகத்தில் வீழ்ந்தார். ஷமி வீசிய 18வது ஓவரில் டிவிலியர்ஸ் (2), கோஹ்லி (48) அவுட்டாகினர், பெங்களூரு அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்தது. மோரிஸ் (25), உதனா (10) அவுட்டாகாமல் இருந்தனர்.

அசத்தலான பஞ்சாப்பின் பந்து வீச்சில் பெங்களூரு அணி திணறிதான் குறைவான ரன்களே எடுக்க முடிந்துள்ளது.