பிசிசிஐ புதிய தலைவராக ரோஜர் பின்னி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

மும்பை : இந்திய கிரிக்கெட் வாரிய புதிய தலைவராக இந்திய அணியின் முன்னாள் வீரரும், கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகியுமான 67 வயதான ரோஜர் பின்னி இன்று அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பிசிசிஐ 91வது ஆண்டு பொதுக்கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் ஜெய் ஷா, சவுரவ் கங்குலி, ராஜீவ் சுக்லா, அருண் சிங் துமல், ரோஜர் பின்னி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடந்த 3 ஆண்டுகளாக பி.சி.சி.ஐ. முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், பெங்கால் மாநில கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவிக்கு மீண்டும் வரப்போவதாக கங்குலி அறிவித்துள்ளார்.

இதையடுத்து பிசிசிஐ தலைவர் பதவிக்கு 67 வயதான பின்னி வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக இந்திய அணியின் முன்னாள் வீரரும், கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகியுமான 67 வயதான ரோஜர் பின்னி இன்று அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.