பிபா உலகக் கோப்பை தொடர்... வெளி விவகாரச் செயலாளர் கட்டார் பயணம்

இங்கிலாந்து: பிபா உலகக் கோப்பை தொடருக்காக கட்டாருக்குச் செல்கிறார் பிரிட்டன் வெளிவிவகாரச் செயலாளர் ஜேம்ஸ் க்ளெவர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

தனது அரசாங்கம் சார்பில் தன்னை பிரதிநிதித்துவப்படுத்துவதனை உறுதிசெய்த ஜேம்ஸ் க்ளெவர், பயணிக்கும் பிரித்தானிய ரசிகர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கட்டாரில் இருக்கும் போது ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என்றும் உள்ளூர் சட்டங்களுக்கு இணங்குமாறும் கூறியதற்காக அவர் விமர்சனங்களை எதிர்கொண்டார். கட்டாரில் ஓரினச்சேர்க்கை சட்டவிரோதமானது, ஏனெனில் இது இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் கீழ் ஒழுக்கக்கேடானதாகக் கருதப்படுகிறது.

கட்டாரில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் எவருக்கும் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். LGBT உரிமைகள், பெண்களின் உரிமைகள் மற்றும் தங்கள் உயிரை இழந்த தொழிலாளர்களுக்கான கவலைகள் தொடர்பாக உலகக் கோப்பை தொடரை புறக்கணிப்பதாக தொழிலாளர் தலைவர் சர் கீர் ஸ்டார்மர் கூறியுள்ளார்.