சிறப்பாக செயல்படவில்லை என்ற விமர்சனத்தை ஏற்க முடியாது

புதுடில்லி: இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர் தோல்வி டி20 உலக கோப்பையில் சிறப்பாக செயல்படவில்லை என்ற விமர்சனத்தை ஏற்க முடியாது என்று தென் ஆப்பிரிக்கா அணி வீரர் டேவிட் கருத்து தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்த தென்னாப்பிரிக்கா தொடரை இழந்தது.

கவுகாத்தியில் நடந்த 2வது போட்டியில் இந்தியா 237 ரன்கள் எடுத்திருந்தது பின்பு போராடி தோல்வியடைந்தது தென்னாப்பிரிக்கா. டேவிட் மில்லரின் அபார சதத்தால் தென் ஆப்ரிக்கா 221 ரன்களை நெருங்கியது.

தோல்விக்கு பின் தென் ஆப்ரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் மில்லர் அளித்த பேட்டியில், இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர் தோல்வி டி20 உலக கோப்பையில் சிறப்பாக செயல்படவில்லை என்ற விமர்சனத்தை ஏற்க முடியாது. கடந்த ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பைக்கு முன்பும் ஆஸ்திரேலியா இதே போல் தடுமாறியது. அவர்களை பலவாறு விமர்சித்தார்கள்.

ஆனால் இறுதியில் ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பையை வென்றது. எனவே இந்த தோல்வி குறித்து நாங்கள் அதிகம் கவலைப்படவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நாங்கள் சிறந்த அணியாக மாறியுள்ளோம். எல்லோரும் நன்றாக விளையாடுவார்கள். மேலும், கடந்த ஆண்டில் பல தொடர்களை வென்றுள்ளோம்,” என்று தகவல் அளித்தார்.