ராஜஸ்தான் வெற்றியால் பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்கான வாய்ப்பை இழந்த சிஎஸ்கே

ஐபிஎல் தொடர் ஆரம்பித்திலிருந்தே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய அனைத்து சீசனிலும் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியிருந்தது. ஆனால் இந்த ஆண்டுக்கான சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 11 போட்டிகளில் மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தால் பிளே-ஆப்ஸ் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது.

இருப்பினும் மற்ற அணிகளின் வெற்றித் தோல்வியை கணக்கிட்டு சென்னை அணி மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் 6 வெற்றிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் தகுதி பெற வாய்ப்பு இருந்ததாக கருதப்பட்டது. அதன்படி, நேற்று ஆர்சிபி அணியை வீழ்த்தியிருந்தது. ஆனால், ராஜஸ்தான் ராயல்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியதால் அந்த வாய்ப்பும் பறிபோனது.

நேற்றைய போட்டிக்கு முன், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைய வேண்டும். கிங்ஸ் லெவன் பஞ்சாப் கொல்கத்தாவை இன்றைய போட்டியில் வீழ்த்த வேண்டும். கடைசி இரண்டு போட்டிகளிலும் தோற்க வேண்டும். சன்ரைசர்ஸ் ஐதராபாத் கடைசி இரண்டு போட்டிகளில் ஒன்றிலாவது மிகப்பெரிய ரன்ரேட் வித்தியாசத்தில் தோற்க வேண்டும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக மிகப்பெரிய வித்தியாசத்தில் தோற்க வேண்டும். ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியை ராஜஸ்தான் வீழ்த்தியதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு அதிகாரப்பூர்வமாக இல்லாமல் போய்விட்டது. சென்னை அணியின் கனவு தகர்ந்தது.