டோனி கவனத்தை சிதறடிக்கும் எந்த வி‌ஷயத்திலும் சிக்கி கொள்ளமாட்டார்-கேன் வில்லியம்சன்

தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் விளையாட்டு வீரர்கள் வீடுகளிலே முடங்கியுள்ளனர். இந்த ஊரடங்கு காலத்தில் பல்வேறு வீரர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி குறித்தும் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்டார் ஸ்போட்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் டோனி குறித்து தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

டோனி குறித்து அவர் கூறுகையில், டோனி கவனத்தை சிதறடிக்கும் எந்த வி‌ஷயத்திலும் சிக்கி கொள்ளமாட்டார். எது முக்கியமோ அதனை மட்டுமே நினைத்து கொண்டிருப்பார். எது மிக முக்கியமோ அதில் தீவிர கவனம் செலுத்துவார். அவர் தனிச்சிறப்பானவர் என்று புகழ்ந்து கூறியுள்ளார்.

இதே நிகழ்ச்சியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கும் கலந்து கொண்டார். அவரும் டோனி குறித்து தனது அனுபவத்தை கூறியுள்ளார். 2003-2004-ம் ஆண்டுகளில் நான் முதல் முதலாக டோனியுடன் வெளிநாடு கிரிக்கெட் தொடருக்கு சென்றேன். அவர் அமைதியானவர் பழகுவதற்கு எளிமையானவர். அவர் கோபத்தை வெளிப்படுத்தி நான் அதிகம் பார்த்ததே இல்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், அப்போது பார்த்த டோனிக்கும், இப்போது உள்ள டோனிக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், வெள்ளை முடி தெரிவது மட்டுமே என்று தினேஷ் கார்த்திக் கூறினார். பலரும் சமூக வலைத்தளங்களில் டோனி குறித்த அனுபவத்தை பகிர்ந்து வருகின்றனர்.