ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்து அரைசதம், சதம் அடித்து இந்திய அணியில் இடம் பிடித்த வீரர்

இந்திய அணியின் தொடக்க வீரராக களம் இறங்கிய ஷிகர் தவான், இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பைக்குப்பின் சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை. ரோகித் சர்மா டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்கியதில் இருந்து இவருக்கு டெஸ்ட் போட்டியில் இடம் இல்லாமல் போனது. இதனால் ஒருநாள் போட்டியில் இடம் கிடைக்குமா? என்ற சந்தேகமும் இருந்தது. இந்நிலையில் தான் ஐபிஎல் தொடர் வந்தது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இருந்து டெல்லிக்கு மாறிய தவான் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடவில்லை. 0 , 35, 34, 26, 32, 5 என முதல் ஆறு போட்டிகளில் ஆட்டமிழந்தார். அதன்பின் 69, 57, 101, 106 என அசத்தினார். இரண்டு அரைசதங்கள், இரண்டு சதங்கள் அடுத்தடுத்து அடித்ததால் தவான் மீண்டும் ஃபார்முக்கு வந்துவிட்டார் என ரசிர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதனால் தேர்வுக்குழு 26-ந்தேதி அறிவித்த ஆஸ்திரேலியா தொடருக்கான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார் ஷிகர் தான். சதம் அடித்த பிறகு விளையாடிய மூன்று போட்டிகளிலும் 6, 0, 0 என படுமோசமாக விளையாடியுள்ளர். இன்றைய போட்டியில் வெற்ற பெற்றால்தான் பிளேஆஃப்ஸ் சுற்று என்ற நிலையில் டெல்லிக்கு எதிராக விளையாட இருக்கிறார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடிய கேல்எல் ராகுல் ஒயிட்பால் இந்திய அணிக்கு துணைக் கேப்டனாகவும், மயங்க் அகர்வால் பேட்ஸ்மேனாகவும் இடம் பிடித்துள்ளனர். ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் சூர்ய யாதவ் இடம் பிடிக்காமல் போனது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.