இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் மூலம் அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டுப் பிரபலங்களில் 3-வது நபராக இவராம்

இன்ஸ்டாவில் அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டுப் பிரபலங்களில் 3-வது இடத்தில் விராட் கோலி உள்ளார்.போட்டோ மற்றும் வீடியோக்களை ஷேர் செய்ய பயன்பட்டு வருகிறது சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம்.

இதையடுத்து இது மெட்டா நிறுவனத்தின் வசம் உள்ளது. இதில் பிரபலங்கள் தொடங்கி சாமானியர்கள் வரையில் பலரும் பயனர்களாகவுள்ளனர்.இதனை அடுத்து இவர்களில் அதிக ஃபாலோயர்களை பெற்றவராக உள்ளார் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த ரொனால்டோ. சுமார் 59,68,48,846 பேர் அவரை இத்தளத்தில் பின்தொடர்கின்றனர்.

இதற்கு அடுத்தாக அர்ஜென்டினாவை சேர்ந்த மெஸ்ஸியை 47,92,68,484 பேர் இன்ஸ்டாவில் பின்தொடர்ந்து கொண்டு வருகின்றனர். கோலியை, 25,52,69,526 பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். பிரபலங்கள் அனைவரும் இன்ஸ்டாகிராம் தளத்தில் தாங்கள் பகிரும் சில பதிவுகளுக்கு ஸ்பான்சர்ஷிப் பெறுவது உண்டு. எனவே அதன் மூலம் அவர்களுக்கு வருமானமும் கிடைக்கும். அந்த வகையில் இன்ஸ்டா மூலம் அதிக வருமானம் ஈட்டும் பிரபலங்கள் பற்றிய
விவரம் வெளியாகிவுள்ளது.

இதில் விளையாட்டுப் பிரபலங்களில் முதல் 3 இடங்களில் ரொனால்டோ, மெஸ்ஸி மற்றும் கோலி உள்ளனர். ரொனால்டோ, ஒரு பதிவுக்கு ரூ.26.76 கோடி ஈட்டுகிறார். மெஸ்ஸி, ரூ.21.49 கோடி ஈட்டுகிறார். கோலி, ஒரு பதிவுக்கு ரூ.11.45 கோடி ஈட்டுகிறார்.