இந்திய வீரர் முகமது ஷமிக்கு கொரோனா தொற்று இல்லை

புதுடில்லி: கொரோனா தொற்று இல்லை... இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு கொரோனா நோய்த் தொற்று இல்லை என்பது பரிசோதனையின் முடிவில் தெரியவந்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கு முன்பு முகமது ஷமிக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், அந்தத் தொடரிலிருந்து அவர் விலகினார். அவருக்குப் பதில் உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, தென்னாப்பிரிக்காவுடனான தொடரிலிருந்தும் ஷமி விலகினார். இந்த நிலையில், தான் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துவிட்டதாக ஷமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் தயார் நிலை வீரர்களில் முகமது ஷமியும் இடம்பெற்றுள்ளார். எனினும், அவர் கடந்த நவம்பருக்குப் பிறகு எந்தவொரு சர்வதேச டி20 ஆட்டத்திலும் விளையாடவில்லை. டி20 உலகக் கோப்பைக்கு முந்தைய கடைசி டி20 தொடர்களிலும் அவர் விளையாடவில்லை. இதனால், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் தயார் நிலை வீரர்களில் அவரது இடம் கேள்விக்குறியாகியுள்ளது.

அதேசமயம், அவரது அனுபவம், ஆஸ்திரேலிய ஆடுகளம் மற்றும் சமீபத்திய ஐபிஎல் தொடரில் அவரது செயல்பாடுகள் உள்ளிட்டவை கருத்தில் கொள்ளப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.