அதிவேகமாக 2 ஆயிரம் ரன்னைக் கடந்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்ற கேஎல் ராகுல்,

ஆர்சிபி- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. ஆர்சிபி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்தில் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். அதன்பின் மயங்க் அகர்வால் சற்று தடுமாறினார்.

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கேஎல் ராகுலில் அபார சதத்தால் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. பின்னர் 207 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தேவ்தத் படிக்கல் - ஆரோன் பிஞ்ச் ஜோடி களம் இறங்கியது. அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததையடுத்து பெங்களூர் அணி 17 ஓவர்கள் முடிவிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது. 69 பந்துகளில் 7 சிக்சர்கள் 14 பவுண்டரிகள் உள்பட 132 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர் கேஎல் ராகுல் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார். இந்த போட்டியின்போது கேஎல் ராகுல் இரண்டாயிரம் ரன்னைக் கடந்தார்.

2 ஆயிரம் ரன்னைக் கடக்க அவருக்கு 60 இன்னிங்ஸ் தேவைப்பட்டுள்ளது. இதற்கு முன் சச்சின் தெண்டுல்கர் 63 இன்னிங்சில் கடந்து அதிவேகமாக கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றிருந்தார். தற்போது கேஎல் ராகுல் அந்த பெருமையை தட்டிப்பறித்துள்ளார். கிறிஸ் கெய்ல் 43 இன்னிங்சில் கடந்த முதல் இடத்தில் உள்ளார்.