9 வீரர்கள் கொண்ட பட்டியல்... தொடர் நாயகன் விருது யாருக்கு?

அகமதாபாத்: தொடர் நாயகன் விருது யாருக்கு?... ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில் இந்தத் தொடருக்கான நாயகன் விருது யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த நிலையில் ஐசிசி 9 வீரர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இதில் இந்த ஒன்பது வீரர்களும் ஐசிசி தொடர் நாயகன் விருதுக்கு போட்டியிடுகிறார்கள்.

இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் ரோகித் சர்மா. இந்திய அணியின் கேப்டன், அதிரடி பேட்ஸ்மேன் என்ற பல பொறுப்புகளை வகித்திருக்கும் ரோகித் சர்மா பத்து போட்டிகளில் விளையாடி 552 ரன்களை குவித்திருக்கிறார். இதில் அதிகபட்சமாக 130 ரன்கள் அடங்கும். ஒரு சதம், மூன்று அரை சதம் என அடித்திருக்கும் ரோகித் சர்மா 124 என்ற அளவில் ஸ்ட்ரைக் ரைட்டை வைத்திருக்கிறார்.

24 வயதான ரச்சின் ரவீந்திரா உலகக்கோப்பை தொடரில் இளம் வயதிலேயே அதிக ரன் அடித்த வீரர் என்று பெருமையை பெற்றிருக்கிறார். இதேபோன்று நியூசிலாந்தை சேர்ந்த டாரல் மிச்சல் இந்த பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். அவர் பத்து போட்டிகளில் விளையாடி 552 ரன்கள் குவித்து இரண்டு சதம், இரண்டு அரை சதம் ஆகியவற்றை அடித்திருக்கிறார்.

தொடர் நாயகன் விருதுக்கு தென்னாப்பிரிக்கா வீரர் குயிண்டன் டி காக் இடம் பெற்றிருக்கிறார். அவர் பத்து போட்டிகளில் விளையாடி 594 ரன்கள் குவித்திருக்கிறார். இதில் நான்கு சதம் அடங்கும். இதேபோன்று ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் இந்த பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். எட்டு போட்டிகளில் விளையாடி 398 ரன்கள் குவித்தாலும் ஒரு இரட்டை சதம் அடித்திருக்கிறார். இதேபோன்று மேக்ஸ்வெல் பந்துவீச்சிலும் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். முகமது சமியும் இடம் பெற்று இருக்கிறார்.

இவர் 6 போட்டிகளில் விளையாடி 23 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இதில் மூன்று முறை ஐந்து விக்கெட்டுகளை சமி வீழ்த்தி இருக்கிறார். இதேபோன்று ஆஸ்திரேலிய சுழற் பந்துவீச்சாளர் ஆடம் சாம்பாவும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளார். அவர் 10 போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இந்திய வீரர் பும்ராவும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளார். அவர் பத்து போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.