சென்னை அணியில் இரண்டு போட்டியோடு ஓரங்கப்பட்டடுள்ள லுங்கி நிகிடி

ஐபிஎல் 2018 சீசனில் இருந்து தென்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். இவர் காயம் காரணமாக கடந்த சீசனில் விளையாடவில்லை. இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை அணிக்கெதிராக முதல் ஆட்டத்தில் களம் இறங்கினார். அப்போது, லுங்கி நிகிடி 38 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான 2-வது ஆட்டத்தில் கடைசி ஓவரில் நான்கு சிக்சர்கள் விட்டுக்கொடுக்க, 4 ஓவரில் 56 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் 3-வது போட்டியில் கழற்றிவிடப்பட்டார். அவருக்குப் பதிலாக ஹாசில்வுட் களம் இறக்கப்பட்டார். வெயின் பிராவோ அணிக்கு திரும்பிய பின்னர் ஹசில்வுட் நீக்கப்பட்டார்.

சாம் கர்ரன் சிறப்பாக விளையாடி வருவதால் சென்னை அணி அவரை நீக்க விரும்பவில்லை. இதனால் இரண்டு போட்டியோடு கழற்றிவிடப்பட்ட லுங்கி நிகிடி, மீண்டும் அணிக்கு திரும்ப முடியுமா? என்ற கவலையில் உள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், அங்கே அதிக அளவில் மோசமான விசயங்கள் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு பதில் அளித்த ரசிகர், நீங்கள் சிறந்த அணியில் விளையாட தகுதியானவர் எனத் தெரிவித்துள்ளார். இந்த பதிவின் மூலம் பார்க்கும்போது அவர் அணியில் இருந்து நீக்கியதால் கவலையில் இருப்பது தெளிவாகியுள்ளது.