பீலேவின் சாதனையை முறியடித்த நெய்மார்

பொலிவியா: நெய்மரின் சாதனை... சர்வதேச கால்பந்து அரங்கில் பிரேசில் அணிக்காக அதிக கோல் அடித்தவர் என்ற சாதனையை நெய்மார் படைத்துள்ளார்.

உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் பொலிவியாவுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் நெய்மார் இரண்டு கோல் அடித்தார்.

இதன் மூலம், பிரேசில் அணிக்காக 77 கோல் என்ற சாதனையைப் படைத்திருந்த உலகக் கால்பந்து ஜாம்பவான் பீலேயின் சாதனையை நெய்மார் முறியடித்தார்.

92 ஆட்டங்களில் பீலே செய்த சாதனையை 125 ஆட்டத்தில் நெய்மார் முறியடித்தார். நெய்மாரின் சாதனையை மெச்சி அவருக்கு பிரேசில் நாட்டின் கால்பந்து சம்மேளனம் சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளது.