பெல்ஜியம் கிராண்ட் பிரி கார் பந்தயத்தில் 'ரெட்புல்' அணி மேக்ஸ் முதலிடம்

பெல்ஜியம்: பெல்ஜியம் கிராண்ட் பிரி கார் பந்தயத்தில் 'ரெட்புல்' அணியின் மேக்ஸ் வெர்ஸ்டப்பன் முதலிடம் பெற்றுள்ளார். மேலும் 13 பந்தயங்களில் முதலிடம் பிடித்த அணி என்ற சாதனையை ரெட் புல் படைத்துள்ளது.

பெல்ஜியமில் நடைபெற்ற பார்முலா ஒன் கிராண்ட் பிரி கார் பந்தயத்தில் ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டப்பன் முதலிடம் பிடித்தார்.

பந்தயம் தொடங்கும்போது ஆறாவது இடத்திலிருந்த வெர்ஸ்டப்பன் அனைத்து வீரர்களையும் பின்னுக்குத் தள்ளி வாகை சூடினார். அவரை விட 22 வினாடிகள் தாமதமாக வந்த செர்ஜியோ பெரஸ் இரண்டாவது இடத்தை பிடித்தார்.

73 ஆண்டு கால பார்முலா ஒன் வரலாற்றில் தொடர்ந்து 13 பந்தயங்களில் முதலிடம் பிடித்த அணி என்ற சாதனையை ரெட் புல் படைத்துள்ளது.