இந்திய அணியில் எனக்கு இடம் இல்லாமல் போனதற்கு இவர்கள்தான் காரணம் - பத்ரிநாத்

இந்திய அணிக்காக 2008 ஆம் ஆண்டு சுப்ரமணியம் பத்ரிநாத் அறிமுகமானார். தமிழகத்திலிருந்து இந்திய அணிக்கு தேர்வான மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக இருந்தார். தமிழக அணிக்காக பத்தாயிரம் ரன்களுக்கு மேல் குவித்து இந்திய அணியில் இவர் இடம்பிடித்தார்.

சச்சின் டெண்டுல்கர், விவிஎஸ் லட்சுமணன், ராகுல் டிராவிட், விரேந்தர் செவாக் , கௌதம் கம்பீர். யுவராஜ் சிங். மகேந்திரசிங் தோனி ஆகியோர் இவர் இந்திய அணியில் அறிமுகமானபோது இருந்தனர். இருப்பினும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

ஒரே ஒரு டி20 போட்டியில் 43 ரன்கள் எடுத்தார். டெஸ்ட் போட்டியில் அறிமுகமான அறிமுகமான போது, ஆடி அரைசதம் கடந்தார். அதன்பின் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இதுகுறித்து சுப்ரமணியம் பத்ரிநாத் கூறுகையில், என்னால் என்ன செய்ய முடியுமோ அனைத்தையும் செய்தேன். ஆனால் இந்திய அணியின் பேட்டிங் மிகவும் பலம் வாய்ந்ததாக இருந்தது. என்னால் அணியில் இருந்த வரை என்னுடைய பங்களிப்பை முடிந்தளவுக்கு செய்தேன். அவர்களை உடைத்து விட்டு என்னால் செல்ல முடியவில்லை என்று கூறினார்.

மேலும் அவர், ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், லட்சுமணன், சேவாக், கௌதம் கம்பீர் யுவராஜ் சிங், மகேந்திரசிங் தோனி என பலர் இருந்ததால் தான் எனக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை என சுப்ரமணியம் பத்ரிநாத் கூறியுள்ளார். 2008ஆம் ஆண்டு இவருக்கு பதிலாக தான் விராட் கோலி அணியில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.