உலக அளவில் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட வீரர் என்ற பெருமையை பெற்ற விராட் கோலி

உலக அளவில் 2020 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை மாதத்திற்கு ஆன்லைனில் அதிகம் முறை தேடப்பட்ட வீரர் என்ற பெருமையை இந்திய அணி கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார்.

இந்திய அணியின் கேப்டனாக கோலி, பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார். இவர் கேப்டனாக பொறுப்பேற்ற பின்னர் இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் வரலாறு காணாத சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், டி 20 உலகக்கோப்பைத் தொடர் உட்பட எந்தவொரு போட்டிகளும் நடைபெறவில்லை. இதனால் வீரர்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

அதனால் கொரோனா விழிப்புணர்வு வீடியோ, வேடிக்கையான வீடியோக்கள், புகைப்படங்கள் எனப் பதிவிட்டு வருகிறார் இந்நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாவில் கோலி செய்த சாதனை குறித்த தகவல் ஒன்று வெளியாகியது. அதாவது கோலியின் இன்ஸ்டாகிராம் அக்கௌண்ட்டை 70 மில்லியன் ஃபாலோயர்கள் பின் தொடர்கிறார்கள். இந்தியாவில் இவ்வளவு ஃபாலோயர்கள் கொண்ட ஒரே வீரர் என்ற பெருமையினைப் பெற்றுள்ளார்.

தற்போது அவர் குறித்த மற்றொரு தகவல் வெளியாகி இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, அதாவது உலக அளவில் ஆன்லைனில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் பற்றிய ஆய்வினை SEMrush நடத்தி வருவது வழக்கம்.

அந்த ஆய்வில் விராட் கோலி உலக அளவில் 2020 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை மாதத்திற்கு அதிகம் முறை தேடப்பட்ட வீரராக இருக்கிறார், அதாவது இவர் ஆன்லைனில் 16.2 லட்சம் முறை தேடப்பட்டு உள்ளார். இவர் முதல் இடத்தை பிடித்துள்ளது இந்திய ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.