பெண்களே தனியாக பயணம் மேற்கொள்ள போகிறீர்களா? உங்கள் பயணம் மகிழ்ச்சியாக அமைய சில குறிப்புகள்!

இன்றய காலங்களில் பெண்களும் தனியாக பயணிக்கத் தொடங்கி விட்டனர். ஆனாலும் தனியாக பயணிக்கும் பெண்களுக்குள் பல பயமும், தயக்கமும் இருந்து கொண்டே தான் இருகின்றது. இவற்றையெல்லாம் போக்கி, ஒரு தைரியமான மற்றும் மகிழ்ச்சியான பயணத்தை மேற்கொள்ள இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.

முதல் வேலையாக நீங்கள் உங்கள் பயத்தை விட்டுவிட வேண்டும். இந்த பயம் தான் உங்கள் அனைத்து பிரச்சனைக்கும் காரணமாகி விடுகின்றது. மேலும் பல தருணங்களில் நீங்கள் ஆபத்தில் சிக்கிக் கொள்ளவும் இது காரணமாகி விடுகின்றது. அதனால், பயப்படுவதை முதலில் விட்டு விடுங்கள்.

உங்களுக்குள் ஏற்படும் தன்னம்பிக்கை தான் நீங்கள் பாதுகாப்பாக செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று, பாதுகாப்பாக வீட்டிற்கு திரும்ப காரணமாக இருக்கும். மேலும் இந்த தன்னம்பிக்கை உங்கள் குறிக்கோள் அல்லது உங்கள் காரியம் நினைத்தபடி நிறைவேறவும் உதவியாக இருக்கும்.

ஒரு பெண் தனியாக பயணம் செய்வது, அவளுக்கு மட்டும் பயத்தை உண்டாக்குவதில்லை, அவள் குடும்பத்தினருக்கும் பயத்தை உண்டாக்கும். அதனால், நீங்கள் தனியாக பயணிக்கத் தொடங்கும் முன், உங்கள் குடும்பத்தினர்களுக்கு முதலில் நம்பிக்கையைத் தாருங்கள். அவர்களது நம்பிக்கையும் நீங்கள் பாதுகாப்பாக சென்று வர உதவியாக இருக்கும்.

உங்கள் பயணத்தின் போது உங்கள் குடும்பத்தினர், உங்கள் நண்பர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் என்று அனைவருடனும் தொடர்பில் எப்போதும் இருந்து கொண்டே இருப்பதை உறுதி செய்யுங்கள். இதனால், நீங்கள் பாதுகாப்பாக இருப்பதை அவர்களும் உறுதி செய்வதோடு, ஏதாவது ஒரு சாதகமற்ற சூழலில் உங்களுக்கு உடனடி உதவி கிடைக்கவும் இது உதவியாக இருக்கும்.

முடிந்த வரை பாதுகாப்பான ஆடைகளை அணிந்து கொள்வது நல்லது. கவர்ச்சியான மற்றும் குறைவான ஆடைகளை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். முழுமையாக உங்களை மறைக்கும் வகையில் ஆடை அணிவது நல்லது. உதாரணத்திற்கு சுடிதார் போன்ற ஆடைகள் உங்கள் உடலை முழுமையாக மறைப்பதோடு, ஏதாவது ஆபத்து ஏற்பட்டாலும், நீங்கள் எளிதாக தப்பிக்க உதவியாகவும் இருக்கும். குறிப்பாக விரைவாக ஓர் இடத்தை விட்டு ஓட அல்லது தாவ இந்த ஆடை உதவியாக இருக்கும்.

அதிக சுமைகளை எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் தேவைக்குத் தகுந்தவாற ஆடைகள் மற்றும் பிற பொருட்களை ஒரு பெட்டியில் அடங்கும் படி எடுத்துக் கொள்ளுங்கள். பல பேட்டிகள் அல்லது பைகளை நீங்கள் தனியாக பயணிக்கும் போது எடுத்து சென்றால், சில நேரங்களில் அவற்றை தூக்கிக் கொண்டு உங்களால் போக வேண்டிய இடத்திற்கு நடக்க முடியாமல் போகலாம், அல்லது உங்களால் கவனிக்க முடியாமல் தொலைக்கவும் ஏறிடலாம்.

நீங்கள் எங்கு தங்கப் போன்கின்றீர்கள் என்பதை உறுதி செய்து, முன் கூட்டியே மும் பதிவு செய்ய வேண்டும். எனினும் தங்கும் விடுதி, காட்டேஜ் போன்ற இடங்களில் தனியாக தங்குவதை விட உங்கள் தோழிகள் அல்லது உறவினர்கள் வீட்டில் தங்குவது பாதுகாப்பைத் தரும். நீங்கள் முதன் முதலாக ஒரு இடத்திற்கு செல்கின்றீர்கள் என்றால், அந்த இடத்தைப் பற்றி போதிய தகவல்களை சேகரித்துக் கொள்வது நல்லது.

முடிந்த வரை அதிக பணம், விலையுர்ந்த கைபேசி, கைகடிகாரம் மற்றும் தங்க நகைகள் போன்றவற்றை அணிந்து கொண்டோ அல்லது உடன் எடுத்து செல்வதோ வேண்டாம். இவை திருடு போக வாய்ப்பு இருந்தாலும், இதனாலும் உங்களுக்கு ஆபத்து ஏற்படலாம். மேலும் உங்கள் பயணத்தின் போது எப்போதும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். புது இடங்களில் யாரையும் நம்பி அதிக நேரம் பேசுவதோ, அல்லது உங்களை பற்றின தகவல்களை கூறுவதோ கூடாது.