மேற்கத்திய பயணிகளை வெகுவாக கவரும் தெரஸா தீவு!

அந்தமான் நிகோபார் தீவுகளில் தனிமையான தீவாக காட்சியளிக்கும் தெரஸா தீவு ஏராளமான சுற்றுலா அம்சங்களை கொண்டுள்ளது. பொதுவாக மேற்கத்திய நாடுகளிலிருந்து வரும் பயணிகளை இது வெகுவாக கவர்கிறது.

தெரஸா தீவுக்கு சென்றடைய பயணிகளுக்கு சற்றே சிரமமாக இருக்கலாம். போர்ட் பிளேரிலிருந்து வாடகை ஹெலிகாப்டர் மூலம் ஒன்றரை மணி நேர பயணத்தில் தெரஸா தீவுக்கு செல்லலாம். வேறொரு மார்க்கமாக நான்கௌரி தீவு வழியாகவும் இரண்டரை மணி நேரத்தில் செல்லலாம்.

தெரஸா தீவானது மரம் மற்றும் களி மண்ணால் செய்யப்பட்ட கைவினைப்பொருட்களுக்கு பிரசித்தமாக அறியப்படுகிறது. குறைவான விலையில் அதே சமயம் கலையம்சத்துடன் காட்சியளிக்கும் இந்த அழகுப்பொருட்கள் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் ரசனையுடன் விரும்பி வாங்கப்படுகின்றன. பொதுவாக மரத்தில் குடையப்பட்ட சிறு படகுகள் மற்றும் மண் பானைகள் இங்கு கிடைக்கும் கைவினைப்பொருட்களில் குறிப்பிடத்தக்கவையாகும். இவை யாவுமே சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் குடிசைத்தொழில் கூடங்களில் கைவினைக்கலைஞர்களால் பெரும்பாலும் கைகளாலேயே உருவாக்கப்படுகின்றன.

2004ம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி பேரழிவில் பெரிதும் பாதிக்கப்பட்டபோதிலும் 2043 குடி மக்களை உள்ளடக்கிய குறிப்பிடத்தக்க ஒரு சிறிய எண்ணிக்கையாக வசிக்கும் தெரஸா தீவு சமூகத்தினர் தங்கள் கலைப்பொருட்களுக்கென ஒரு வியாபார அடையாளத்தை உருவாக்கிக்கொண்டுள்ளனர். இங்கு கிடைக்கும் கலைப்பொருட்களை பார்த்து ரசிப்பதும் உள்ளூர் மக்களின் கலாச்சாரத்தை கவனிப்பதும் பயணிகளை நிச்சயம் கவரும் அனுபவமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

கடந்த சுனாமி தாக்குதலில் இந்த தீவுப்பகுதியே இரண்டாக பிரிக்கப்பட்டிருக்கும் காட்சியும் பயணிகள் காண வேண்டிய ஒன்றாகும். நிலப்பகுதிகளையே மாற்றி அமைக்கும் அளவுக்கு வல்லமை படைத்த சுனாமியின் சீற்றத்தை நாம் இதிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.