Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • புதுச்சேரி பிரத்தியங்கரா காளி கோவிலில் அக்னிதோஷ நிவர்த்தி அபிஷேகம்

புதுச்சேரி பிரத்தியங்கரா காளி கோவிலில் அக்னிதோஷ நிவர்த்தி அபிஷேகம்

By: Nagaraj Wed, 31 May 2023 7:35:39 PM

புதுச்சேரி பிரத்தியங்கரா காளி கோவிலில் அக்னிதோஷ நிவர்த்தி அபிஷேகம்

புதுச்சேரி: புதுச்சேரி பிரத்தியங்கரா காளி கோவிலில் அக்னி வெயில் நிறைவையொட்டி அக்னிதோஷ நிவர்த்தி அபிஷேகம் நடந்தது.
புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டி பகுதியில் உலகிலேயே மிக உயரமான மொரட்டாண்டி மகா பிரத்தியங்கரா காளி கோவில் அமைந்துள்ளது. இங்கு வருடம் தோறும் அக்னி வெயில் நிறைவையொட்டி அக்னிதோஷ நிவர்த்தி அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டும், உலகமெங்கும் ஐஸ்வர்யம் தேவைப்படுவதால், பொதுமக்களை அக்கினி வெப்பத்தில் இருந்து காக்க பிரத்யங்கிரா காளிக்கு 24 மணி நேர மகா அபிஷேகம் நடைபெற்றது.

devi,prathiyangira,puducherry,temple, ,ஆலயம், தேவி, பிரத்தியங்கிரா, புதுச்சேரி

கோயில் பீடாதிபதி நடாத்தூர் ஜனார்த்தன சுவாமி தலைமையில் நடைபெற்ற அபிஷேகம் அதிகாலை 5 மணிக்குத் தொடங்கி இன்று காலை 7 மணிக்கு நிறைவடைந்தது.

1008 லிட்டர் தயிர், பால், நெய் மற்றும் 1008 லிட்டர் பன்னீர், நுங்கு மற்றும் 108 கிலோ மஞ்சள், குங்குமம், விபூதி, சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் இடைவிடாது நடைபெற்றது. தொடர்ந்து, காளிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மகா தீபாராதனைகள் நடந்தன.

இந்த அபிஷேகத்தில் கலந்து கொண்டால் நொடிப் பொழுதில் நோய் நொடியின்றி நீண்ட ஆயுளுடன் வாழ்வதோடு, சகல செல்வங்களும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை, எனவே ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags :
|
|