Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து இருக்கும் நிலையில் தங்கும் விடுதி கட்ட நிதி ஒதுக்கீடு

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து இருக்கும் நிலையில் தங்கும் விடுதி கட்ட நிதி ஒதுக்கீடு

By: vaithegi Sat, 24 Sept 2022 5:53:56 PM

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து இருக்கும் நிலையில் தங்கும் விடுதி கட்ட நிதி ஒதுக்கீடு

திருப்பதி : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் செப்டம்பர் 27ம் தேதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இந்த பிரமோற்சவ விழாவானது அக்டோபர் 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதனை அடுத்து தற்போது பிரம்மோற்சவ விழாவுக்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடந்து வருகிறது. 2 வருடங்களுக்கு பிறகு நடப்பதால் விழாவில் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் வருகை புரிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், உணவு, போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு அனைத்து வித சிறப்பு தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

tirupati,hostel,financial allocation ,திருப்பதி ,விடுதி ,நிதி ஒதுக்கீடு

மேலும் நேரில் வரும் பக்தர்கள் மற்றும் இலவச தரிசன சேவைக்காக வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. எப்போதும் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து இருக்கும் நிலையில் தங்கும் விடுதிகளுக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது.

எனவே இதற்கு தீர்வு காணும் வகையில் கூடுதலாக 10,000 பேர் தங்கும் அளவில் விடுதி கட்ட ரூ.95 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருப்பதியில் தினமும் 20,000 டிக்கெட் மட்டுமே விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதனால் பக்தர்கள் 2 மணி நேரத்தில் தரிசனம் செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Tags :
|