Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • திருப்பதி ... ஆர்ஜித சேவைகளுக்கு பக்தர்கள் இன்று முதல் முன்பதிவு செய்யலாம்

திருப்பதி ... ஆர்ஜித சேவைகளுக்கு பக்தர்கள் இன்று முதல் முன்பதிவு செய்யலாம்

By: vaithegi Thu, 18 May 2023 11:55:23 AM

திருப்பதி   ...   ஆர்ஜித சேவைகளுக்கு பக்தர்கள் இன்று முதல் முன்பதிவு செய்யலாம்

திருப்பதி : ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் திருக்கோயில் தரிசன டிக்கெட் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது. இதையடுத்து ஒவ்வொரு மாதமும் தேவஸ்தானம் ஆன்லைனில் டிக்கெட் விநியோகம் செய்து கொண்டு வருகிறது இந்த டிக்கெட் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே விற்று தீர்ந்து விடுகிறது.

இதனால் பக்தர்கள் தரிசன டிக்கெட் பெற்று வெகு நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. வழக்கமாகவே திருப்பதி திருக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக தான் இருக்கும். தற்போது கோடை விடுமுறை என்பதால் பக்தர்கள் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய திருப்பதிக்கு வந்த வகையில் உள்ளனர்.

devotees,thirupati,arjitha seva ,பக்தர்கள் ,திருப்பதி   ,ஆர்ஜித சேவை

இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் இன்று ஆர்ஜித சேவைகளுக்கான டிக்கெட்டை வெளியிடுள்ளது. பக்தர்கள் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளுக்கு இன்று காலை 10 மணி முதல் வருகிற மே 20 -ம் தேதி வரை ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கோவிலில் அங்க பிரதட்சணம் செய்வதற்கான இலவச டோக்கன் வருகிற மே -23ஆம் தேதி முதல் ஆன்லைனில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :