Advertisement

பகவத் கீதை கூறும் வாழ்க்கை போதனைகள்

By: Nagaraj Fri, 24 June 2022 09:43:03 AM

பகவத் கீதை கூறும் வாழ்க்கை போதனைகள்

சென்னை: பகவத்கீதை கூறும் வாழ்க்கை போதனைகள் பற்றி தெரிந்து கொள்வோம். வாழ்வென்பது உயிர் உள்ளவரை மட்டுமே. தேவைக்குச் செலவிடு. அனுபவிக்கத் தகுந்தன அனுவி.

இயன்றவரைப் பிறருக்கு உதவி செய். ஜீவகாருண்யத்தை கடைப்பிடி, இனி, அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை. உயிர் போகும் போது, எதுவும் கொண்டு செல்லப் போவதுமில்லை. ஆகவே அதிகமான சிக்கனம் அவசியமில்லை.

children,bhagavad gita,parents,life,teachings ,குழந்தைகள், பகவத்கீதை, பெற்றோர், வாழ்க்கை, போதனைகள்

மடிந்தபின் என்ன நடக்கும் என்று குழம்பாதே. உயிர் பிரியத் தான் வாழ்வு. ஒரு நாள் பிரியும். சுற்றம், நட்பு, செல்வம் எல்லாமே பிரிந’்து விடும். உயிர் உள்ளவரை ஆரோக்கியமாக இரு. உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே. உன் குழந்தைகளைப் பேணு. அவர்களிடம் அன்பாய் இரு.

அவ்வப்போது பரிசுகள் அளி. அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே. அடிமையாகவும் ஆகாதே. பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ, சூழ்நிலை கட்டாயத்தாலோ உன்னைக் கவனிக்க இயலாமல் தவிக்கலாம். புரிந்து கொள். அதைப்போலப் பெற்றோரை மதிக்காத குழந்தைகள் உன் சொத்து பங்கீட்டுக்குச் சண்டை போடலாம்.

Tags :
|