Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • சேலம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு

சேலம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு

By: Nagaraj Sun, 25 Sept 2022 3:20:14 PM

சேலம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு

சேலம்: சிறப்பு பூஜை... புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை ஒட்டி சேலம் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


சேலம், கோட்டை பெருமாள் கோவில் புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெறுவது வழக்கம். கடந்த 18-ந் தேதி புரட்டாசி மாதம் தொடங்கியது. அதைத்தொடர்ந்து நேற்று புரட்டாசி முதலாவது சனிக்கிழமையை யொட்டி சேலம் மாநகரில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது.


சேலத்தில் பிரசித்திபெற்ற கோட்டை பெருமாள் கோவிலில் மூலவருக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் கோவில் வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயர் தங்ககவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உற்சவ மூர்த்திகளான பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்செய்தனர்.

puratasi,saturday,special worship,devotees,sami darshan ,புரட்டாசி, சனிக்கிழமை, சிறப்பு வழிபாடு, பக்தர்கள், சாமி தரிசனம்

இதேபோல் அம்மாபேட்டை வேணுகோபால் சுவாமி கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. சேலம் செவ்வாய்பேட்டை பாண்டுரெங்கநாதர் கோவிலில் பெருமாள் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உடையாப்பட்டி சென்றாய பெருமாள் கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சாமி தன்வந்திரி அலங்காரத்தில் காட்சியளித்தார்.

சேலம் பொன்னம்மாபேட்டை ஆஞ்சநேயர் கோவிலில் சாமிக்கு வெற்றிலை காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சேலம் டவுன் பாபு நகர் பகுதியில் அலமேலுமங்கை தாயார் சமேத திருப்பதி வெங்கடாஜலபதி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Tags :