Advertisement

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது

By: vaithegi Mon, 15 May 2023 10:26:07 AM

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை  திறக்கப்பட்டது

சபரிமலை: வைகாசி மாத பூஜைக்காக நடை-திறப்பு ... சபரிமலையில் பிரசித்தி பெற்ற அய்யப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மண்டல, மகரவிளக்கு சீசன் தவிர சித்திரை விஷூ உள்பட விசேஷ நாட்கள் மற்றும் ஒவ்வொரு தமிழ் மாத்தின் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கமான ஒன்று.

இதையடுத்து அதன்படி நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். இதையடுத்து 18-ம் படிக்கு கீழ் அமைக்கப்பட்டுள்ள கற்பூர ஆழியில் நெருப்பு மூட்டப்பட்டது. அதன் பிறகு சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அங்கு பயபக்தியுடன் பக்தர்கள் அய்யப்பனை தரிசனம் செய்தனர்.

sabarimala,worship ,சபரிமலை ,வழிபாடு


மேலும் வருகிற 19-ந் தேதி வரை 5 நாட்கள் வழிபாடு நடைபெறுகிறது. இந்நாட்களில் வழக்கமான பூஜைகளுடன் நெய்யபிஷேகம், உஷபூஜை, உச்சபூஜை, உதயாஸ்தமன பூஜை, கலசாபிஷேகம், களபாபிஷேகம், படி பூஜை, புஷ்பாபிஷேகம் நடைபெறும்.

பிரதிஷ்டை தினம் 5 நாட்கள் பூஜை முடிவடைந்ததும் 19-ந்தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். பிறகு பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு வருகிற 29-ந்தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து வருகிற 30-ந்தேதி பிரதிஷ்டை தின சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். அதேபோன்று பக்தர்களின் வசதிக்காக நிலக்கல்லில் உடனடி தரிசன முன்பதிவும் நடைபெற்று கொண்டு வருகிறது.

Tags :