Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • திருப்பதி .. பக்தர்கள் எண்ணிக்கை உயர்வு ... தரிசன முறையில் தேவஸ்தானம் சில மாற்றம்

திருப்பதி .. பக்தர்கள் எண்ணிக்கை உயர்வு ... தரிசன முறையில் தேவஸ்தானம் சில மாற்றம்

By: vaithegi Mon, 29 May 2023 3:24:37 PM

திருப்பதி .. பக்தர்கள் எண்ணிக்கை உயர்வு  ...   தரிசன முறையில் தேவஸ்தானம் சில மாற்றம்

திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறை காரணமாக பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் தரிசன முறையில் தேவஸ்தானம் சில மாற்றம் ...... திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பல லட்சக்கணக்கில் பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள். ஆனால் இம்மாதம் கோடை விடுமுறை காரணமாக பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறது.

கடந்த 10 நாட்களாகவே பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் முன்னதாக 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு இருந்த பக்தர்கள் வரிசை தற்போது 5 கிலோ மீட்டர் தூரம் வரை நீண்டு உள்ளது. இந்த நிலையில் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தான தரிசன முறையில் அதிரடி மாற்றம் செய்துவுள்ளது.

devasthanam,darshan,devotees ,தேவஸ்தானம் ,தரிசன முறை,பக்தர்கள்

எனவே அதன் படி இன்று முதல் வருகிற ஜூன் மாதம் 30-ம் தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் சுப்ரபாத சேவையில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.

அதே போன்று வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் விஐபி பரிந்துரை கடிதங்களின் அடிப்படையில் வருகிற ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை. அதன் மூலம் 22 ஆயிரம் கூடுதல் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :