Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • திருப்பதி .. பக்தர்களின் எண்ணிக்கை உயர்வு .. இன்று வரை விஐபி தரிசனம்

திருப்பதி .. பக்தர்களின் எண்ணிக்கை உயர்வு .. இன்று வரை விஐபி தரிசனம்

By: vaithegi Sun, 21 May 2023 11:24:39 AM

திருப்பதி ..  பக்தர்களின் எண்ணிக்கை உயர்வு .. இன்று வரை விஐபி தரிசனம்

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதன் காரணமாக நாளை வரை விஐபி தரிசனம் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவிப்பு ..

தற்போது அனைத்து மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கோடை விடுமுறை என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. தற்போது நாளொன்றுக்கு மட்டுமே 75 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து கொண்டு வருகின்றனர்.

vip,tirupati ,விஐபி ,திருப்பதி

அதிலும், தற்போது வார இறுதி நாட்கள் என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் நாளொன்றுக்கு தரிசனம் செய்ய வருவதால் கிட்டத்தட்ட 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் நேற்று சுவாமியை 36 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்வதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று விஐபி தரிசனம் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால், 36 மணி நேரம் காத்திருக்க வேண்டிய பக்தர்கள் 18 மணி நேரத்திலேயே தரிசனம் செய்வதாக தேவஸ்தானம் அறிவித்திருக்கிறது. மேலும், ரூபாய் 300 தரிசன டிக்கெட் மூலமாக சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் குறைந்தது 3 மணி நேரத்திலும், இலவச பிரிவில் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் 5 மணி நேரத்திலும் தரிசனம் செய்ததாகவும் தேவஸ்தானம் அறிவித்திருக்கிறது.

Tags :
|