Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • திருப்பதி ஆன்லைன் டிக்கெட் வெளியிடப்படும் மாற்றம்

திருப்பதி ஆன்லைன் டிக்கெட் வெளியிடப்படும் மாற்றம்

By: vaithegi Tue, 16 May 2023 5:24:34 PM

திருப்பதி ஆன்லைன் டிக்கெட் வெளியிடப்படும்  மாற்றம்

திருப்பதி : கோடை விடுமுறையை முன்னிட்டு பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஆன்லைன் டிக்கெட் வெளியிடப்படும் தேதி மாற்றம் ... ஆந்திராவில் உள்ள புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் மாதந்தோறும் ஆன்லைன் வாயிலாக டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

எனவே இதன் மூலம் பக்தர்கள் தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ரூ. 300 தரிசன டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம். தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

online ticketing,refund ,ஆன்லைன் டிக்கெட்,திருப்பதி

இதனை அடுத்து நேற்று மட்டும் சுமார் 70,366 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்நேரத்தில் தேவஸ்தானம் ஆர்ஜித சேவை மற்றும் ரூ.300 சிறப்பு தரிசன சேவை டிக்கெட்களை வெவ்வேறு தேதிகளில் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது.

எனவே அதன் படி மாதந்தோறும் 18 ம் தேதி முதல் 20-ம் வரை சுப்ரபாதம் தரிசன டிக்கெட் வெளியிப்படும். மேலும் வருகிற 21-ம் தேதி ஆர்ஜித சேவை டிக்கெட் வெளியிடப்படும். அதனை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் 24-ம் தேதி ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :