Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • நேற்று புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை ... ஏராளமான பக்தர்கள் திருமலைக்கு சாமி தரிசனம்

நேற்று புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை ... ஏராளமான பக்தர்கள் திருமலைக்கு சாமி தரிசனம்

By: vaithegi Sun, 25 Sept 2022 3:18:59 PM

நேற்று புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை ...  ஏராளமான பக்தர்கள் திருமலைக்கு சாமி தரிசனம்

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 27-ந்தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. எனவே அதையொட்டி பல ஊர்களில் இருந்து வரும் ஏராளமான பக்தர்கள் திருமலையில் குவிய தொடங்கி உள்ளனர்.

இதனை அடுத்து திருமலையில் தங்கும் விடுதிகள், சத்திரங்கள் போன்றவற்றில் பக்தர்கள் நிரம்பி வழிகின்றனர். அங்குள்ள முக்கிய சாலைகள், பூங்காக்களில் பக்தர்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. நேற்று புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் திருமலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர்.

tirupati,sami darshanam ,திருப்பதி,சாமி தரிசனம்

மேலுக்கு வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி திருமலையில் உள்ள லேப்பாட்சி சர்க்கிள் வரை 1½ கிலோ மீட்டர் தூரம் வரை வரிசையில் காத்திருந்தனர். அதிகாலை 3 மணியில் இருந்து மாலை 6 மணி வரை 48 ஆயிரத்து 500 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்துக்கு 16 மணிநேரம் ஆனதாக கோவில் அதிகாரி கூறினார்.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மட்டும் ஏழுமலையான் கோவிலில் 65 ஆயிரத்து 158 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனா். 28 ஆயிரத்து 416 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.4 கோடியே 44 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் சர்ப்பில் தெரிவித்தனர்.

Tags :