Advertisement

இயற்கையாக எளிய முறையில் சருமத்தை அழகாக்கும் வழிமுறை

By: Nagaraj Tue, 20 Sept 2022 9:22:57 PM

இயற்கையாக எளிய முறையில் சருமத்தை அழகாக்கும் வழிமுறை

சென்னை: இயற்கையாக எளிய முறையில் சருமத்தை அழகாக்கும் வழிமுறைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

தலைமுடி மற்றும் முகம் இரண்டையும் அழகாக்க உதவுகிறது கடலைமாவு. கடலைமாவுடன் தயிர், மஞ்சள் தூள் மற்றும் எலுமிச்சை ஆகியவற்றைக் கலந்து முகத்தில் தடவி சிறிதுநேரம் கழித்து முகத்தைக் கழுவவும். முகம் பிரகாசமான பொலிவுடன் இருக்கும்.

சருமத்தில் காணப்படும் கரும்புள்ளிகளைப் போக்க தயிர் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது .தலைமுடிக்கும் தயிர் மிகச்சிறந்த ஊட்டச்சத்தாகும் தலைமுடியை மிருதுவாக வைத்திருப்பதோடு பொடுகுத் தொல்லையில் இருந்தும் விடுதலை தரக்கூடியது .

face,skin,beauty,honey,curd,chickpea flour,tomato ,முகம், சருமம், அழகு, தேன், தயிர், கடலைமாவு, தக்காளி

எலுமிச்சையை சிறு துண்டாக வெட்டிக் கொண்டு அதை முகம், கழுத்து, கை மற்றும் கால்களில் நன்கு தேய்க்க வேண்டும். இது சருமத்துக்குப் பொலிவைத் தருவதோடு மட்டுமல்லாமல் சருமத்தில் உள்ள இறந்த செல்களைப் புதுப்பிக்கவும் செய்கிறது .

தேன் எல்லா வகையான சருமத்துக்கும் ஏற்றது. அதனால் தயிர், எலுமிச்சை , கடலைமாவு, தக்காளி, ஆகியவற்றுடன் தேனைச் சேர்த்து முகத்துக்குப் பயன்படுத்தலாம் இது முகத்தின் அழகை மெருகூட்ட பயன்படுகிறது .

Tags :
|
|
|
|
|