- வீடு›
- அழகு குறிப்புகள்›
- இயற்கை பொருட்களை மட்டுமே பயன்படுத்தி அழகை உயர்த்திக் கொள்ளலாம்
இயற்கை பொருட்களை மட்டுமே பயன்படுத்தி அழகை உயர்த்திக் கொள்ளலாம்
By: Nagaraj Sat, 01 Oct 2022 11:00:40 PM
சென்னை: அழகு தான் ஒருவருக்கு முதலில் தன்னம்பிக்கையை கொடுக்கிறது. ஒவ்வொருவரும் முகத்தை பொலிவாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள இயற்கை பொருட்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.
பார்லரில் உபயோகப்படுத்தம் படும் ரசாயனங்களால் உடனடியாக நிறம் பெற்றாலும் விரைவில் சருமம் முதிர்ந்துவிடும். சுருக்கங்கள் உருவாகி வயதான தோற்றத்தை பெற நேரிடும். மிக மிக எளிதாக வீட்டிலேயே, வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே அன்றாடம் நாம் எப்படி நம் முகத்தை அழகாக வைத்துக் கொள்ளலாம் என்று பார்ப்போம்.
தக்காளி: மஞ்சள் மற்றும் தக்காளியை கலந்து முகத்தில் தடவினால் அது சரும பிரச்சனைகளை நீக்கி, சருமத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள உதவும்.
கடலைப்பருப்பு: கடலை பருப்பு பாசி பயறு கால் கிலோ, ஆவாரம் பூ காய வைத்தது 100 கிராம், கால் கிலோ மூன்றையும் அரைத்து சோப்புக்கு பதிலாக பயன்படுத்தினால் முகம் மிகவும் அழகு பெறும்.
பயத்தம் பருப்பு: முகம் பொலிவு பெற, எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், புதினா சாறு 2 ஸ்பூன், பயத்தம் பருப்பு மாவு இவற்றை கலந்து முகத்தில் போட்டு அரை மணி நேரம் கழித்து முகத்தை கழுவினால் முகம் பளபளக்கும்.
கஸ்தூரி மஞ்சள்: வெயிலில் சென்று விட்டு வரும்போதெல்லாம் முகத்தை குளிர்ந்த நீரில் கஸ்தூரி மஞ்சள் போட்டு கழுவ வேண்டும். இப்படி செய்தால், வெயிலில் படியும் தூசி, கண்ணுக்கு தெரியாத நுண்ணிய உயிரிகளை அழித்து முகத்தை பொலிவு பெறும்.