Advertisement

அழகான கூந்தல் மற்றும் பொலிவான சருமத்திற்கு கேரட் எண்ணெய்!

By: Monisha Sat, 30 May 2020 3:31:57 PM

அழகான கூந்தல் மற்றும் பொலிவான சருமத்திற்கு கேரட் எண்ணெய்!

அழகான கூந்தல் இருக்க வேண்டும் என்ற ஆசையா? அதனுடன் சேர்த்து உங்கள் சருமமும் பொலிவாக இருக்க வேண்டுமா? அப்படி என்றால் நீங்கள் கேரட் எண்ணெய் தயாரித்து பயன்படுத்தலாம். இந்த கேரட் எண்ணெய்யைப் பயன்படுத்துவதால் நீங்கள் இளமையாகவும் தோன்ற முடியும்.

கேரட் எண்ணெய் பயன்படுத்துவதால் பல்வேறு நன்மைகள் உடலுக்குக் கிடைக்கிறது. கூந்தல் மற்றும் சருமத்திற்கு சிறந்த முறையில் பலன் அளிக்க உதவுகிறது. குளிர் காலத்தில் மற்றும் மழைக் காலங்களில் சருமம் வறண்டு இருப்பதால், கேரட் எண்ணெய் பயன்படுத்தி சருமத்திற்கு ஈரப்பதம் அளிக்கலாம்.

கேரட் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள்: கேரட் அல்லது ஆர்கானிக் கேரட் - 2 அல்லது 3,ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்.

beautiful hair,bright skin,carrot oil,vitamin e,beta carotene ,அழகான கூந்தல்,பொலிவான சருமம்,கேரட் எண்ணெய்,வைட்டமின் ஈ,பீட்டா கரோடின்

செய்முறை
கேரட்டை தோல் சீவி துருவிக் கொள்ளவும். துருவிய கேரட்டை ஒரு பேன் அல்லது கிராக் பாட்டில் போடவும். உங்களுக்கு விருப்பமான ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யை சேர்க்கவும். கேரட் துருவல் முழுவதும் மூழ்கும் அளவிற்கு எண்ணெயை ஊற்றவும். இப்படி செய்வதால் கேரட் முழுவதும் எண்ணெயில் ஊறி அடியில் தங்கி விடும். நன்றாக ஊறியவுடன் கேரட் மிகவும் மென்மையாக மாறி, அந்த எண்ணெய் முழுவதும் ஆரஞ்சு நிறமாக மாறி விடும். அப்போது அடுப்பை நிறுத்திவிட்டு ஆற விடவும். அடுத்த 24 மணி நேரம் இந்த கேரட் எண்ணெயிலேயே ஊறட்டும். ஆறியவுடன், ஒரு வடிகட்டி பயன்படுத்தி எண்ணெய்யை வடிகட்டிக் கொள்ளவும். பிறகு அதனை ஒரு கண்ணாடி குடுவையில் ஊற்றி வைக்கவும்.

இந்த கேரட் எண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் பீட்டா கரோடின் போன்றவை சிறந்த கண்டிஷனராக செயல்படுகிறது. இதில் இருக்கும் வைட்டமின் ஈ சத்து, உங்கள் கூந்தல் மற்றும் உச்சந்தலையை சேதங்களில் இருந்து பாதுகாக்கிறது. மேலும் இது முடி உதிர்வைத் தடுத்து, கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

Tags :