Advertisement

கண்களை பாதுகாப்பது மிகவும் அவசியம்... இதோ சில யோசனைகள்

By: Nagaraj Sat, 05 Nov 2022 11:53:18 PM

கண்களை பாதுகாப்பது மிகவும் அவசியம்... இதோ சில யோசனைகள்

சென்னை: கண்ணை பாதுகாப்பது அவசியம்... நம் உடம்பில் மிக முக்கியமான ஒரு உறுப்பு நமது கண். இந்த அழகான உலகை காதல் இறைவன் நமக்கு கொடுத்த வரம். அதை நாம் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

தற்போது குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் கண்களில் பிரச்சனை ஏற்படுகிறது. பெரியவர்களுக்கு வயது முதுமையின் காரணமாக கண்களில் பிரச்சனை ஏற்படும். ஆனால் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே கண் பிரச்சினை ஏற்படுகிறது.

காரணம் என்னவென்றால் குழந்தைகள் அதிக நேரம் டிவி, செல்போன் போன்றவற்றை பார்க்கின்றனர். முன்பெல்லாம் நிலாவை காட்டி சோறு ஊட்டுவார்கள். தற்போது செல்போன் கொடுத்தால் தான் சாப்பிடுவேன் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனாலேயே சிறுவயது முதல் கண்கள் பாதிப்பிற்கு உள்ளாகிறது.

sight,skill,increase,rest,computer ,கண்பார்வை, திறன், அதிகரிக்கும், ஓய்வு தர வேண்டும், கணினி

பச்சை காய்கறிகள், மஞ்சள் மற்றும் சிவப்பு பழங்கள் அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். கண் புரை, கண் நரம்பு சிதைவு, விழித்திரை புள்ளி சிதைவு ஆகியவை வராமல் தடுக்க புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும். சூரிய கதிர்களின் புற ஊதாக்கதிர் இருந்து கண்களை காத்துக் கொள்ள குளிர் கண்ணாடிகளை அணிய வேண்டும்.

ஆபத்தான வேலைகளில் ஈடுபடும் போது பாதுகாப்புக் கண்ணாடிகள் பயன்படுத்த வேண்டும். கணினியைப் பார்த்து வேலை செய்யும்போது இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை கண்களுக்கு ஓய்வு தர வேண்டும். கணினியை இருபது அடி தொலைவில் பார்க்க வேண்டும். கண்களைப் பறிக்கும் அல்லது தேடும் முன்பு கைகளை நன்றாக கழுவ வேண்டும்.

கண் தொற்றுக்கு நேரடியாக கடையில் மருந்து வாங்குவதை தவிர்த்து விட வேண்டும். மருத்துவரை அணுகி மருந்துகளை வாங்க வேண்டும். இதுபோன்ற பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றினால் கண் பார்வைத் திறன் மங்காமல், பார்வைத்திறன் அதிகரிக்கும் என அறிவுறுத்தப்படுகிறது.

Tags :
|
|
|