Advertisement

ஃபேஸ் வாஷ் செய்யும் போது முக்கியமாக பின்பற்ற வேண்டிய சில குறிப்புகள்!

By: Monisha Tue, 29 Dec 2020 5:27:02 PM

ஃபேஸ் வாஷ் செய்யும் போது முக்கியமாக பின்பற்ற வேண்டிய சில குறிப்புகள்!

உங்கள் சருமப் பாதுகாப்பில் முகத்தை சுத்தம் செய்வது மிகவும் இன்றியமையாததாக உள்ளது. ஆனால் சில சமயம் இதனைச் செய்யும் போது சில தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது. ஃபேஸ் வாஷ் செய்யும் போது சரியான முறைகளைப் பின்பற்றவில்லையென்றால் விளைவுகள் எதிர்மறையாக மாறலாம். இதுப்போன்ற தவறுகளைத் தவிர்ப்பது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம்.

ஃபேஷியல் வைப்ஸ் எனப்படும் முகத்தைத் துடைக்கும் முறை நல்ல மற்றும் உபயோகமான ஒன்று. ஆனால் அடிக்கடி துடைப்பது அல்லது மிக அதிகமாகத் துடைப்பது, சருமத்தின் மெல்லிய அடுக்குகளை பாதிப்பதோடு, உங்களுடைய சருமத்தை மாசு மற்றும் சூரியக் கதிர்கள் உள்ள பாதுகாப்பற்ற நிலையில் விட்டுவிடும். எனவே ஒரு நாளைக்கு இருமுறைக்கு மேல் முகத்தைத் துடைக்க வேண்டாம். தேவைப்பட்டால் முதத்தை நல்ல தண்ணீர் மற்றும் ஒரு நல்ல ஃபேஸ் வாஷைக் கொண்டு கழுவலாம்.

face wash,skin,face,beauty,cleansing ,ஃபேஸ் வாஷ்,சருமம்,முகம்,அழகு,சுத்தம்

மிகவும் சூடான நீராலோ அல்லது மிகவும் குளிர்ந்த நீராலோ முகத்தை கழுவ வேண்டாம். ஆனால் வெதுவெதுப்பான நீர் சருமத்தை எந்தவித பாதிப்புமின்றி கழுவ ஏற்றது. சிலர் எப்போது பார்த்தாலும் முகத்தை தேய்த்துக் கொண்டோ அல்லது கழுவிக் கொண்டோ இருப்பார்கள். இதனால் முகத்திலுள்ள அழுக்கு போய்விடும் என்று நினைப்பார்கள் ஆனால் அது தவறு. உண்மையில் இதில் நன்மையை விட தீமையே அதிகம். இவ்வாறு செய்வது முகச் சருமத்திலுள்ள மென்மையான அடுக்குகளை பாழாக்கி சருமத்தை இறுகச் செய்துவிடும். நன்றாகச் சுத்தம் செய்யுங்கள் ஆனால் ஓவராக வேண்டாம்.

மேக்கப்பை கண்டிப்பா களையுங்க இந்த விஷயம் பல காலமாகக் கூறப்பட்டு வந்தாலும், மக்கள் இதில் கவனம் செலுத்துவதில்லை. நாளின் இறுதியில் மேக்கப்பை களைவது நமது தேர்வல்ல கட்டாயமான ஒன்று. உங்கள் சருமம் மூச்சு விடுவதையும், அதை நீங்கள் போட்ட மேக்கப் மறைத்து காற்றைப் புக விடாமல் அது திணறுவது போலவும் நினைத்துப் பாருங்கள். அப்போது உங்களுக்கு இதன் முக்கியத்துவம் புரியும்.

Tags :
|
|
|