- வீடு›
- அழகு குறிப்புகள்›
- சரும வறட்சியை போக்க உங்களுக்கு சில எளிய யோசனைகள்
சரும வறட்சியை போக்க உங்களுக்கு சில எளிய யோசனைகள்
By: Nagaraj Tue, 15 Nov 2022 10:35:10 PM
சென்னை: சரும வறட்சியால் நீங்கள் சிரமப்படுகிறீர்கள் எனில், சில எளிய குறி ப்புகள் மூலம் வீட்டிலேயே இப்பிரச்சனையை குறைக்கலாம். வானிலை மிக வேகமாக மாறுகிறது. அதன் தாக்கம் நம் சருமத்திலும் தெளிவாகத் தெரிகிறது. குளிர்காலம் வரும்போது, வீசும் குளிர்ந்த காற்று மற்றும் வறண்ட வானிலை போன்றவற்றால் பலரது சருமம் வறண்டு போய்விடுகிறது.
வறண்ட சருமம் காரணமாக, பல நேரங்களில் தோலில் தடிப்புகள் ஏற்படுகிறது, சில சமயங்களில் தோல் உரிய தொடங்குகிறது. இது போன்ற சூழலில், முகத்தின் அழகும் பாதிக்கப்படுகிறது. கடைகளில், வறண்ட சருமத்தை பராமரிக்க பல பொருட்களை நீங்கள் காணலாம்.
பல நன்மைகளையும் அளிக்கும் இந்த பேஸ்பேக் செய்யும் முறையை தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
கடலைமாவு - 1 டேபிள்ஸ்பூன்
சந்தன பவுடர் - 1 டீஸ்பூன்
பால் கிரீம் - 1 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 5 சொட்டு
தேன் - 1 டீஸ்பூன்
வைட்டமின்-E மாத்திரை - 1
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
ரோஸ் வாட்டர் - 1 டீஸ்பூன்
செய்முறை: முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் போடவும். பின்னர் இதனை நன்கு கலக்கவும். ஒரு கட்டி கூட இல்லாதவாறு பார்த்துக் கொள்ளவும்.
இப்போது
வீட்டில் தயாரிக்கப்பட்ட இந்த பேஸ்பேக்கை உங்கள் முகம், கழுத்து மற்றும்
கைகளில் தடவவும். உங்கள் கைகளை வட்ட வடிவத்தில் மெதுவாக நகர்த்த வேண்டும்.
அதன்பிறகு, இதனை முகத்தில் 20 முதல் 25 நிமிடங்கள் வைத்திருக்கவும்.
பேஸ்பேக்கை
முகத்தில் முழுமையாக உலரவிட கூடாது என்பதை நினைவில் கொள்ளவும். பிறகு,
மீண்டும் முகத்தை மெதுவாகத் தேய்த்து கழுவ வேண்டும். அதன் பிறகு உங்கள்
முகத்தை சாதாரண நீரில் சுத்தம் செய்யவும்