- வீடு›
- அழகு குறிப்புகள்›
- பொடுகுத் தொல்லையை தீர்க்க உதவும் இயற்கை வழிமுறைகள்
பொடுகுத் தொல்லையை தீர்க்க உதவும் இயற்கை வழிமுறைகள்
By: Nagaraj Sun, 12 June 2022 4:55:35 PM
சென்னை: தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி, தலையில் தேய்த்து குளித்தால்,உடல் உஷ்ணம் குறைவதுடன் பொடுகுத் தொல்லை தீரும். பாசிப்பயிறு மாவு மற்றும் தயிர் கலந்து தலையில் உறவைத்த பின்னர் குளிப்பதால் நன்மை பயக்கும்.
கற்றாழை சாற்றை தலையில் மேல் தோலில்தேய்த்து ஊறவைத்து சிறிது நேரம் கழித்து குளித்தல். சிறிதளவு தயிரை தலையில் தேய்த்து சிறிது நேரத்தில் சீயக்காய் அல்லது ஷாம்பு தேய்த்து குளித்தல் சிறப்பானது.
பூச்சித்தாக்குதலினால் பொடுகு ஏற்படுவது இயற்கை. அதனால் அந்நேரங்களில் ரசாயன ஷாம்புகளை பயன்படுத்துவதை தவிர்த்து வேப்பிலை கொழுந்து, துளசி ஆகியவற்றை மைய அரைத்து தலையில் தேய்த்து சிறிதுநேரம் கழித்து குளிக்க வேண்டும்.
கறிவேப்பிலை, துளசியை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றுடன் கலந்து தலையில்
சிறிது நேரம் ஊறவைத்து கழித்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை தீரும்.
எலுமிச்சம் பழச்சாற்றுடன், தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து
வந்தாலோ அல்லது எலுமிச்சம் பழச்சாறுடன், தயிர் மற்றும் பச்சைபயிறுமாவு
கலந்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்புபோட்டு குளித்தாலும்
பொடுகு நீங்கும்.
வாரம் ஒருமுறை, மருதாணி இலையை அரைத்து, சிறிதளவு
தயிர் மற்றும் எலுமிச்சைசாறு கலந்து தலையில் தேய்த்தல்.நெல்லிக்காய் தூள்,
வெந்தயப்பொடி, தயிர் மற்றும் கடலைமாவு கலந்து தலையில் தேய்த்து,
சிறிதுநேரம் கழித்து குளிக்கவேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்துவர
வேண்டும்.