- வீடு›
- அழகு குறிப்புகள்›
- சருமத்தை கூடுதல் பொலிவு பெற செய்யும் குங்குமப்பூ
சருமத்தை கூடுதல் பொலிவு பெற செய்யும் குங்குமப்பூ
By: Nagaraj Sun, 24 July 2022 4:30:25 PM
சென்னை: குங்குமப்பூ சருமத்திற்கு அழகு சேர்க்கும் தன்மை கொண்டது. சருமத்தை ஈரப்பதமாக்கும், வடுக்களை குணமாக்கும், முகப்பருவை போக்கும், இளமையை தக்கவைக்கும்.
குங்குமப்பூ தரும் அழகு நன்மைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். குங்குமப்பூவுடன் ஒருசில வீட்டு உபயோகப்பொருட்களை சேர்த்து ‘பேஸ் பேக்’ தயாரித்து சருமத்திற்கு கூடுதல் பொலிவு சேர்க்கலாம்.
குங்குமப்பூ-பால்: ஒரு சிட்டிகை குங்குமப்பூவுடன் 4 டேபிள்ஸ்பூன் பால்
சேர்த்து இரவு முழுவதும் ஊறவைத்துக்கொள்ள வேண்டும். பின்பு அதனை நன்றாக
கிளறிவிட்டு, அதனுள் பஞ்சை முக்கி முகத்தில் தடவிவிட்டு சிறிது நேரம் உலர
விடவும். பின்பு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிவிடலாம். இந்த பேக்
சருமத்திற்கு பிரகாசமான நிறத்தை அளிக்கும்.
குங்குமப்பூ-தேன்:
2-3 குங்குமப்பூ இழைகளுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலக்கிக்
கொள்ள வேண்டும். பின்பு பிரஸையோ, விரலையோ கொண்டு முக்கி முகத்தில் தடவ
வேண்டும். 10 முதல் 15 நிமிடங்கள் வரை உலரவிட்டுவிட்டு பின்பு குளிர்ந்த
நீரில் கழுவி விடலாம்.