Advertisement

கால்கள் அழகாக இருக்க எளிமையான இயற்கை வழிமுறைகள்

By: Nagaraj Mon, 19 Sept 2022 9:43:08 PM

கால்கள் அழகாக இருக்க எளிமையான இயற்கை வழிமுறைகள்

சென்னை: முகம் மட்டும் அழகாக இருந்தால் போதாது கால்களும் பார்க்க அழகாக இருக்க வேண்டும். அப்போது தான் உடைக்கு ஏற்ற காலணிகள் நாம் தேர்வு செய்து அணிய முடியும். இல்லையெனில் கால்கள் பொலிவிழந்து காணப்படும். பாவடை அணிய ஆசைப்படுபவர்கள் கால்கள் பொலிவுடன் இல்லாததால் அணிய தயங்குவார்கள்.

நல்ல பொலிவான பளபளப்பான கால்களை பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம். பாதங்களிலுள்ள சொரசொரப்பு நீங்க : ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழ தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இது கால் வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்கும் மேலும் கிருமிகள் தங்காது. கடுகு எண்ணெயை தினமும் பாதம் மற்றும் கைகளில் தேய்த்து கழுவி வந்தால், சொரசொரப்பு நீங்கும்.

feet,olive oil,softening,tea tree oil,exfoliation ,பாதங்கள், ஆலிவ் ஆயில், மென்மை, டீ ட்ரீ ஆயில், வெடிப்பு

மென்மையான பாதங்களாக திகழும். தினமும் தூங்குவதற்கு முன் விளக்கெண்ணெயை பாதத்தில் தேயுங்கள். சொரசொரப்பான பாதம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது.


மிருதுவான பாதங்கள் கிடைக்க : தயிரை பாதங்களில் தடவி, பிரஷினால் வெடிப்புகளில் தேய்க்க வேண்டும். மறுநாள் உப்பு அல்லது சோடா உப்பை குதிகால்களில் தேய்த்து, கழுவ வேண்டும். தொடர்ந்து இப்படி மாறி மாறி வாரம் மூன்று முறை செய்தால் பாதம் மெத்தென்று ஆகும். வெந்தயக் கீரையை அரைத்து கை, கால்களில் தேய்த்து விட்டு 15 நிமிடம் கழித்து கழுவி வந்தாலும், மென்மையான பாதங்கள் கிடைக்கும்.


பாதங்களில் வெடிப்பு இருந்தால், நல்லெண்ணெயில் 2 சொட்டு டீ ட்ரீஆயில் கலந்து வெடிப்புகளில் தடவி வரலாம். டீ ட்ரீ ஆயில் கிடைக்கவில்லை என்றால் லாவண்டர் ஆயிலுடன் 4 சொட்டு ஆலிவ் ஆயில் கலந்து பாதங்களில் தொடர்ந்து அப்ளை செய்து வாருங்கள். பாதங்களில் ஈரத்தன்மை பேலன்ஸாக இருக்க ஆரம்பித்தால், வெடிப்புப் பிரச்னை போயே போய் விடும்.

Tags :
|