Advertisement

நெற்றி பகுதி முடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்

By: Nagaraj Sat, 09 July 2022 7:54:03 PM

நெற்றி பகுதி முடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்

சென்னை: பொதுவாக வயதாக வயதாக மேல் நெற்றி பகுதியில் முடி உதிர்வடைந்து கொண்டே போகும் அதனால் அவர்களது முக தோற்றமே வேறுபடும். பெண்களுக்கு தலையில் சொட்டையோ அல்லது வழுக்கையோ விழுகாது என்றாலும் பல பெண்களுக்கு முன் நெற்றியில் முடி உதிர்வடைந்து கொண்டு போகும்.

அது அவர்களது முக அழகையே பாதிக்கும். இதனை எளியமுறையில் வளர செய்ய முடியும். அது குறித்து தெரிந்து கொள்வோம். வெங்காயத்தை அரைத்து அவற்றில் சாறு எடுத்து முடி உதிர்ந்த இடத்தில் தடவும் போது, இது மீண்டும் நெற்றியில் முடி வளர வேர்களை உருவாக்கி தருகின்றது. எனவே வெங்காயத்தின் சாறை முடி உதிர்ந்த இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.

for hair growth,coriander,pepper,massage,remedy,grow ,முடி வளர, கொத்தமல்லி, மிளகு, மசாஜ், தீர்வு, வளரும்

இவ்வாறு வாரத்தில் ஒரு முறை செய்து வர முன் நெற்றியில் முடி வளர ஆரம்பிக்கும். மிளகு இரத்த ஓட்டத்தை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. இதனால் முடியின் வேர்க்கால்கள் உறுதியாகி நெற்றியில் முடி வளர உதவுகிறது. மிளகை அரைத்து அவற்றில் சிலதுளிகள் எலுமிச்சை சாறு பிழிந்து நெற்றியில் முடி உதிர்ந்த இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யவும்.

இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்து வர, நெற்றியில் முடி வளர ஆரம்பிக்கும். முன் நெற்றியில் முடி வளர கொத்தமல்லியை அரைத்து தலையில் பூசி 5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்து வர நெற்றியில் முடிவளர ஆரம்பிக்கும்.

Tags :
|
|