- வீடு›
- அழகு குறிப்புகள்›
- தலைமுடி உதிர்விற்கு சரியான தீர்வு வெங்காய ஹேர்பேக்
தலைமுடி உதிர்விற்கு சரியான தீர்வு வெங்காய ஹேர்பேக்
By: Nagaraj Tue, 29 Dec 2020 10:02:54 PM
வெங்காய ஹேர்பேக் தலைமுடி உதிர்வுப் பிரச்சினையை போக்குகிறது. நம்மில் பலரும் சந்திக்கும் தலையாய பிரச்சினை தலை முடி உதிர்வுதான். இதை தீர்க்க வெங்காய ஹேர்பேக்கினை எப்படி செய்வது என்றும், அதனை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையானவை:
வெங்காயம்- 2
மயோனைஸ்- 3 ஸ்பூன்
தயிர்- 25 மில்லி
செய்முறை: வெங்காயத்தினை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
அடுத்து வெங்காயத்துடன் நீர் சேர்த்து மிக்சியில் போட்டு ஜூஸ் எடுத்துக்
கொள்ளவும்.
அதனுடன் தயிர் மற்றும் மயோனைஸ் சேர்த்து 15 நிமிடங்கள்
ஊறவிட்டுப் பயன்படுத்தவும். இந்த வெங்காய ஹேர்பேக்கினை தலைமுடியில் அப்ளை
செய்து 30 நிமிடங்கள் ஊறவிட்டு சீயக்காய் கொண்டு அலசினால் தலைமுடி
உதிர்வுப் பிரச்சினை தீர்வுக்கு வரும்.