Advertisement

நோக்கியாவில் 5ஜி ஸ்மார்ட் ஃபோன், சிறப்பம்சம் அறிய ஆவலா!

By: Karunakaran Mon, 25 May 2020 4:48:10 PM

நோக்கியாவில் 5ஜி ஸ்மார்ட் ஃபோன், சிறப்பம்சம் அறிய ஆவலா!

நோக்கியா மொபைல் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு இருக்கும் டீசர் வீடியோவில் நோக்கியா 8.3 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி பற்றி எந்த தகவலும் இடம்பெறவில்லை.

நோக்கியா 8.3 5ஜி ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஒன் வசதி கொண்டிருக்கிறது. புதிய நோக்கியா ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி பிராசஸர் வழங்கப்படுகிறது.

இதில் 6.81 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி பேனல், பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, ஃபுல் ஹெச்டி பிளஸ் ரெசல்யூஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஜிபி / 8 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.

nokia 8.3 5g,nokia mobile,business,smartphone,technology,nokiamobile live, , வர்த்தகம், நோக்கியா ஃபோன், 5ஜி, ஸ்மார்ட் ஃபோன், வணிகம்

சிறப்பம்சங்கள்


6.81 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி பேனல், பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, ஃபுல் ஹெச்டி பிளஸ் ரெசல்யூஷன்

குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி பிராசஸர், ஆண்ட்ராய்டு 10

6 ஜிபி / 8 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி மெமரி

64 எம்பி பிரைமரி கேமரா, f/1.79

12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா

2 எம்பி மேக்ரோ லென்ஸ்

2 எம்பி டெப்த் சென்சார்

24 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0

டூயல் 5ஜி, வைபை, ப்ளூடூத் 5.0

4500 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் சார்ஜிங்

Tags :