Advertisement

கேக் திருவிழாவில் இடம்பெற்ற அஜித் – விஜய் உருவ 6 அடி கேக்

By: Nagaraj Sat, 25 Feb 2023 7:53:16 PM

கேக் திருவிழாவில் இடம்பெற்ற அஜித் – விஜய் உருவ 6 அடி கேக்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் அண்ணாசிலை அருகில் அமைந்திருக்கிறது அன்பு பேக்கரி. இந்த பேக்கரியில் கேக் திருவிழா கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் அஜித், விஜய் உருவ கேக் செய்து வைத்து அசத்தி உள்ளனர்.

கேக் திருவிழாவில் காண்போர் கண்களையும், நாவையும் கட்டிப்போடும் விதத்தில் பல்வேறு விதமான கேக்குகள் அணிவகுத்தன. தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் பிளம்கேக், கப் கேக், ரோல் கேக், பிளாக் ஃபாரஸ்ட், ஃப்ரெஷ் கிரீம் கேக் உட்படப் பல வகையான கேக்குகள் காட்சிக்கும் ,விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன.

கண்காட்சி நடந்து கொண்டிருந்த போது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை புதிய வகை கேக்குகள் தயார் செய்யப்பட்டுக் கொண்டே இருந்தன. இந்த கேக் திருவிழா கண்காட்சியின் ஹைலைட் என்ன தெரியுமா? தல, தளபதி கேக்குகள்தான். இருவருமே இன்றைய தமிழ் சினிமாவின் ஹாட் கேக்குகள் என்பதாலோ என்னவோ? இருவரையுமே பின்புலமாக வைத்து இருவரது உருவ அமைப்பையும் தத்ரூபமாக வெளிப்படுத்தும் விதத்தில் இரண்டு கேக்குகள் 6 அடி உயரத்தில் தயாரிக்கப்பட்டு அந்தக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன.

fans,public,bakery,ajith,vijay,uru cake ,ரசிகர்கள், பொதுமக்கள், பேக்கரி, அஜித், விஜய், உருவ கேக்

கேக்கில் சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் சிவப்பு சட்டையில் அஜித்தும், வெண்ணிறச் சட்டையில் விஜயும் அவரவர் ரசிகர்களையும், சிறுவர் சிறுமிகளையும், பொதுமக்களையும் கவர்ந்திழுத்துக் கொண்டிருந்தனர்.

இந்த இருவரது உருவங்களையும் தாங்கிய கேக் சுமார் 120 கிலோ என்று கூறப்பட்டது. இந்தக் கண்காட்சியை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த பேக்கரி கூட்டமைப்பினர், ரோட்டரி சங்க உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள், விஜய், அஜித் சங்க ரசிகர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் கண்டு ரசித்து அங்கு தயாரான கேக்குகளை உண்டு ரசித்து மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

Tags :
|
|
|
|
|