Advertisement

2 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.80-ஐ கடந்தது

By: Monisha Wed, 24 June 2020 10:26:33 AM

2 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.80-ஐ கடந்தது

சர்வதேச சந்தையில் கடந்த மார்ச் 16-ம் தேதி கடைசியாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்பின் கொரோனா வைரஸ் பரவல், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி போன்றவற்றால் விலையில் எந்த மாற்றத்தையும் எண்ணெய் நிறுவனங்கள் செய்யவில்லை.

இந்நிலையில், பல நாடுகளில் பொருளாதார நடவடிக்கை வேகமெடுத்து இருப்பதால், பெட்ரோலியக் கச்சா எண்ணெய்க்கான தேவை திடீரென அதிகரித்துள்ளது. இதனால், சர்வேதச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 7ம் தேதி முதல் பெட்ரோல் டீசல் விலை தினந்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அன்றைய தினம் முதல் தினந்தோறும் விலை உயர்த்தப்படுகிறது. இந்த தொடர் விலை உயர்வால், கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.80-ஐ கடந்தது.

international market,petrol,diesel,crude oil,price ,சர்வதேச சந்தை,பெட்ரோல்,டீசல்,கச்சா எண்ணெய்,விலை

இந்த நிலையில் தொடர்ந்து விலை ஏறுமுகத்தில் இருந்து, ரூ.81, ரூ.82 என்ற விலையை கடந்து தற்போது ரூ.83 ஆக இருக்கிறது. நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 17 காசு உயர்ந்து, ஒரு லிட்டர் 83 ரூபாய் 4 காசுக்கும், டீசல் லிட்டருக்கு 47 காசு அதிகரித்து, ஒரு லிட்டர் 76 ரூபாய் 77 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது.

பெட்ரோலை விட, டீசல் தான் அதிகளவில் ஒவ்வொரு நாளும் உயர்ந்து வருகிறது. விலை உயர்வை சந்தித்து வரும் கடந்த 17 நாட்களில் மட்டும் பெட்ரோல் 7 ரூபாய் 50 காசும், டீசல் 8 ரூபாய் 55 காசும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|