- வீடு›
- வணிகம் or வர்த்தகம்›
- வருடத்தின் இறுதியில் தங்கம் விலை அதிரடியாக உயர்வு
வருடத்தின் இறுதியில் தங்கம் விலை அதிரடியாக உயர்வு
By: vaithegi Sat, 31 Dec 2022 4:13:33 PM
சென்னை: தங்கம் விலை இன்று உயர்வு ... தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. அதிலும் டிசம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் கூட ஆபரணத் தங்கத்தின் விலையானது குறையவில்லை.
இதனை அடுத்து கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு நகைகள் வாங்க நினைத்தவர்கள் மற்றும் தங்க அணிகலன்களை விரும்பி அணியும் நகைப்பிரியர்கள் தங்கத்தின் விலை அதிகரிப்பால் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூ. 5,115 ரூபாயாகவும் ஒரு சவரன் ரூ. 40,920 ரூபாய்க்கும் விற்பனையாகி வந்த நிலையில் இன்று அதிரடியாக விலை ஏற்றம் அடைந்துள்ளது. நடப்பு 2022ம் ஆண்டின் இறுதி நாளான இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்துள்ளது.
நாளை புத்தாண்டிற்கு புது நகைகள் வாங்க வேண்டும் என திட்டமிட்டிருந்தவர்கள் இதனால் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இதையடுத்து இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. 41, 040க்கு விற்பனையாகி வருகிறது.
அதனை தொடர்ந்து ஒரு கிராம் ரூ. 5,130க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் வெள்ளியின் விலை மட்டும் இன்று கிராமுக்கு 20 பைசா குறைந்து ரூ.74.30க்கு விற்பனையாகி வருகிறது.