Advertisement

உங்கள் மொபைலில் உள்ள செயலிகள் குறித்து கவனம் வேண்டும்

By: Nagaraj Wed, 16 Dec 2020 4:17:21 PM

உங்கள் மொபைலில் உள்ள செயலிகள் குறித்து கவனம் வேண்டும்

உங்கள் மொபைலில் உள்ள செயலிகள் குறித்து கவனம் செலுத்துங்கள். இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

தொழில்நுட்பம் வளர்ந்து வரவர நாம் சந்திக்கும் பெரும் பிரச்சனைகளில் ஒன்று தரவுகளை திருடுவது. இதற்கு பெரும்பாலும் நம்முடைய மொபைல் செயலிகள் தான் வழிவகுக்கிறது. செயலிகள் பயனாளர்களை கவர்வதற்காக உருவாக்கப்படுகிறதே தவிர அவர்களின் தரவுகளை பாதுகாப்பதில் கவனம் செலுத்துவது இல்லை.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதலே தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய செயலிகளை செக் பாய்ண்ட் ரிசர்ச் என்ற நிறுவனம் கண்டறிந்து உள்ளது. அவற்றில் நூற்றுக்கணக்கான செயலிகள் இருந்தாலும் பெரும்பாலானோர் பயன்படுத்தும் செயலிகளை இப்போது பார்க்கலாம்.

instruction processors,information,checkpoint research ,அறிவுறுத்தல் செயலிகள், தகவல்கள், செக் பாயின்ட் ரிசர்ச்

பேஸ்புக் (Facebook), மெசஞ்சர், இன்ஸ்டா கிராம் (Instagram), யாகூபிரவுசர் (Yahoo browser) போன்ற பிரபலமான ஆன்ட்ராய்டு செயலிகளிலும் அதிக பாதிப்புகள் இருப்பதை கண்டறிந்து உள்ளனர்.

இந்த செயலிகள் மூலம் தனிநபர் தகவல்கள் திருடப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதை தவிர மோட்டோ வாய்ஸ், லைவ் எக்ஸ் லைவ், யாஹூ செயலி ஆகியவையும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த அனைத்து செயலிகளிலும் vulnerable library எனப்படும் பாதிப்பை ஏற்படுத்தும் மால்வேர் இருப்பதை செக் பாய்ண்ட் ரிசர்ச் நிறுவனம் உறுதி செய்து உள்ளது.

மொபைல் லெகன்ட், ஸ்முலே, ஜூக்ஸ் மியூஸிக், வீ சேட், அலி எக்ஸ்பிரஸ் (aliexpress), வீடியோ எம்பி2 கன்வெர்டர் (video MP2 converter) போன்ற செயலிகளும் தனிமனித தகவல்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் எனவும், அவற்றை பயன்படுத்துவதை தவிர்க்கவும் செக் பாயின்ட் ரிசர்ச் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

Tags :