Advertisement

தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை

By: vaithegi Thu, 15 Dec 2022 12:49:19 PM

தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை

சென்னை: இன்றைய நிலையில் தங்கம் வாங்குவது என்பது மிகவும் கடினம். தற்போது ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 40,000க்கும் மேல் விற்பனையாகி வருகிறது. இவ்வாறு ஏற்றம் அடைந்த தங்கத்தின் விலையானது எதிர்பாரத விதமாக நடப்பு மாதமான டிசம்பர் தொடக்கத்தில் இருந்தே படிப்படியாக குறைந்து வருகிறது.

ஆனால் நேற்று முன்தினம் பவுன் ரூ.40,320-க்கு விற்ற தங்கம் நேற்று அதிரடியாக உயர்ந்து ரூ.40,800-க்கு விற்பனை ஆனது. பவுன் ரூ.41 ஆயிரத்தை நெருங்கியதால் நகை வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

gold price,chennai ,தங்கத்தின் விலை ,சென்னை

இதனை அடுத்து இன்றைய காலை நேர நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது.தற்போது ஒரு சவரன் ரூ.40,480க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ.40 குறைந்து ரூ.5,060க்கு விற்பனையாகி வருகிறது.

மேலும் தங்கத்தை தொடர்ந்து வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.1.30 குறைந்து ரூ.72.70க்கு விற்பனையாகி வருகிறது. இன்று தங்கம் விலை குறைந்துள்ளதால் இந்த சூழலை பயன்படுத்தி மக்கள் நகைகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Tags :