Advertisement

வாரத்தின் தொடக்கத்திலேயே தங்கத்தின் விலை சரிவு

By: vaithegi Mon, 28 Nov 2022 12:17:36 PM

வாரத்தின் தொடக்கத்திலேயே தங்கத்தின் விலை சரிவு

சென்னை: தங்கத்தின் விலை சரிவு .... மக்கள் தங்க நகைகள் வாங்க எப்போதும் அதிக ஆர்வம் காட்டுவர். பொதுவாக விசேஷ நாட்கள், சுப முகூர்த்த தினங்கள் போன்ற நாட்களில் தங்க நகை கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். இத்தகைய நாட்களில் தங்கத்தின் விலையானது விற்பனையை பொறுத்து சற்று அதிகமாக இருக்கும்.

இந்த நேரத்தில் இறக்குமதி வரி உயர்வு, ஜிஎஸ்டி வரி உயர்வு ஆகிய காரணங்களால் சமீப காலமாக ஆபரணத்தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதற்கு மத்தியில் நிலவும் பொருளாதார மந்த நிலை, உக்ரைன் – ரஷ்யா போர் போன்றவற்றின் விளைவாக தங்கத்தின் விலை நாள்தோறும் உயர்ந்து கொண்டே வருகிறது.

gold price,chennai ,தங்கத்தின் விலை,சென்னை

அந்த வகையில் வாரத்தின் தொடக்க நாளான இன்று காலை நேர நிலவரப்படி சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.32 குறைந்து ரூ. 39,368க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 4 குறைந்து ரூ. 4,921க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி ஒரு கிராம் 67.50க்கும் ஒரு கிலோ வெள்ளி 67,500க்கும் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு கொண்டு வருகிறது.

Tags :