Advertisement

தங்கம் விலை மீண்டும் உயர்வு

By: Monisha Fri, 25 Dec 2020 8:47:40 PM

தங்கம் விலை மீண்டும் உயர்வு

உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது.

அதன் காரணமாக தங்கம் விலை கடந்த சில மாதங்கள் முன்பு ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. பின்னர் தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் கடந்த 3-ம் தேதி தங்கம் விலை மீண்டும் ரூ.37 ஆயிரத்தை தாண்டியது. பின்னர் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வந்தது.

gold,investment,price,silver,rise ,தங்கம்,முதலீடு,விலை,வெள்ளி,உயர்வு

இந்நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று தங்கம் விலையில் பவுனுக்கு ரூ.56 அதிகரித்து ரூ.37 ஆயிரத்து 816-க்கு விற்கிறது. கிராமுக்கு ரூ.7 உயர்ந்து ரூ.4,727-ஆக உள்ளது.

ஆனால் வெள்ளி விலை இன்று குறைந்து காணப்பட்டது. வெள்ளி கிலோவுக்கு ரூ.200 குறைந்து ரூ.71 ஆயிரத்து 200-ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.71.20-க்கு விற்கிறது.

Tags :
|
|
|