Advertisement

கடந்த 247 நாட்களாக எந்தவித மாற்றம் இன்றி நீடிக்கும் இதன் விலை

By: vaithegi Tue, 24 Jan 2023 10:19:00 AM

கடந்த 247 நாட்களாக எந்தவித மாற்றம் இன்றி நீடிக்கும் இதன் விலை

சென்னை: சென்னையில் கடந்த சில மாத காலமாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றம் இல்லை என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை என்று அறிவிப்பு பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

petrol,diesel price,chennai,crude oil ,பெட்ரோல் ,டீசல் விலை, சென்னை,கச்சா எண்ணெய்

அந்த வகையில், கடந்த 247 நாட்களாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதையடுத்து இந்த நிலையில், தொடர்ந்து 248-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.

எனவே அதன்படி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :
|